Latestமலேசியா

ஆபாச வீடியோ பார்த்து தாயிடம் தகாத கோரிக்கையை வைத்த 17 வயது மாணவன் – நீதிமன்றத்தில் குற்றம் ஒப்புதல்

பத்து பஹாட், ஜூன் 15 – பத்து பஹாட்டில், 17 வயது மாணவன் ஒருவன் தனது தாயிடம் தகாத கோரிக்கை விடுத்ததுடன், ஆபாசமான செயல்களில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளான்.

இந்த சம்பவம் கடந்த ஜூன் 1 ஆம் தேதி மாலை நடைபெற்றது. மாணவன் தனது அறையில் ஆபாச வீடியோ பார்த்த பின்னர் பாலியல் தூண்டுதலுக்கு ஆளாகி, குளித்துக் கொண்டிருந்த 43 வயது தாயை கதவைத் திறக்குமாறு அழைத்துள்ளான்.

கதவைத் திறந்த தாயிடம், அம்மாணவன் தகாத கோரிக்கை வைத்ததோடு ஆபாசமான முறையிலும் நடந்துகொண்டதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியடைந்த தாய் உடனடியாக மீண்டும் குளியலறைக்குள் சென்று கதவை பூட்டிக் கொண்டு பின்னர் போலீசில் புகார் அளித்துள்ளா.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், சமூக நலத் துறையின் அறிக்கையைப் பெறுவதற்காக ஆகஸ்ட் 19 ஆம் தேதிக்கு இவ்வழக்கை ஒத்திவைத்துள்ளது.

மேலும் 1,500 ரிங்கிட் ஜாமீன் விதிக்கப்பட்ட போதிலும், அதை செலுத்த முடியாததால் மாணவன் மூவார் திருத்த மையத்தில் தற்காலிக காவலில் வைக்கப்பட்டுள்ளான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!