புது டெல்லி, மே 6 – இந்தியா, கர்னாட்டகா மாநிலத்தில், தனது 6 வயது நிரம்பிய மாற்றுத்திறனாளி மகனை, முதலைகள் நிறைந்த ஆற்றில் ஈவு இறக்கம் இன்றி வீசி கொலை செய்த, 26 வயது பெண் ஒருவர் கைதுச் செய்யப்பட்டுள்ளார்.
சாவித்திரி எனும் அப்பெண்ணுக்கு இரு மகன்கள் உள்ளனர். அவர்களில், மூத்த மகன் வாய் பேச முடியாத மாற்றுத்திறனாளி ஆவார்.
அதனால், பிறந்தது முதல் அச்சிறுவனுக்கு இருக்கும் குறைப்பாடு தொடர்பில், அப்பெண்ணுக்கும் அவரது கணவருக்கும் அவ்வப்போது வாக்குவாதம் மூலும் வேளை ; அவனை தூக்கி வீசுமாறு அவ்வாடவன் கூறுவதும் வழக்கம் என கூறப்படுகிறது.
நேற்று முன்தினம் மாலை அவர்களுக்குள் மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டதையடுத்து, விரக்தியடைந்த அப்பெண் தனது மகனை, முதலைகள் நிறைந்த ஆற்றுடன் இணைக்கும் கழிவுநீர் கால்வாயில் வீசியுள்ளார்.
சம்பந்தப்பட்ட சிறுவனின் சடலம், உடல் முழுவதும் காயங்களுடன் ஒரு கை இல்லாத நிலையில், நேற்று கண்டுபிடிக்கப்பட்டதை போலீசார் உறுதிப்படுத்தியுள்ளனர்.
அச்சம்பவம் தொடர்பில், சம்பந்தப்பட்ட பெண் கைதுச் செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.