
ஜகார்த்தா- ஆகஸ்ட்- 4 – இந்தோனேசியா , ஜகார்த்தாவில் Zuhur தொழுகையின் போது சொந்தத் தாயையே 18 வயது மகள் படுகொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சனிக்கிழமை பிற்பகல் 1 மணிக்கு நிகழ்ந்த அச்சம்பவத்தில், இடிக்கல் மற்றும் கத்தியைக் கொண்டு மகள் தாக்குதல் நடத்தினாள்.
இதில், தலையில் படுகாயமடைந்த Yati எனும் 49 வயது தாய், சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே மரணமடைந்தார்.
தாயைக் கொன்ற மகள், உடனடியாக பக்கத்து வீட்டுக்குச் சென்று அத்தகவலைக் கூற, அங்கிருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.
ஓடி வந்த பார்த்த அண்டை வீட்டார் இரத்த வெள்ளத்தில் Yati-யின் அசைவற்ற உடலைக் கண்டு போலீஸுக்குத் தகவல் கொடுத்தனர்.
கொலை விசாரணைக்காக மகள் உடனடியாகக் கைதுச் செய்யப்பட்ட வேளை, அவளது இரு இளைய உடன்பிறப்புகள் தற்காலிமாக பக்கத்து வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
அண்டை வீட்டுக்காரர்களை விசாரித்ததில், அப்பெண் மனநோயால் பாதிக்கப்பட்டவர் என்றும் பல முறை அதற்காக சிகிச்சை எடுத்திருப்பதும் தெரிய வந்திருப்பதாக போலீஸ் கூறியது.