ஜகார்த்தா, ஏப்ரல் 17 – இந்தோனேசியாவின் வடசுலாவேசி மாநிலத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை எரிமலைக் குமுறல் ஏற்பட்டதை அடுத்து, பாதிக்கப்பட்ட பகுதியிலிருந்து குறைந்தது 828 பேர் வெளியேற்றப்பட்டுள்ளனர்.
தற்போது தாகுலண்டாங் பகுதியில் சுற்றியுள்ள தற்காலிக தங்குமிடங்களில் 45 பேரும், மீதி 783 பேர் அருகிலுள்ள உறவினர்களின் வீடுகளுக்கு அல்லது படகுகள் பயன்படுத்தி பிரதான நிலப்பகுதிகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர்.
இதனிடையே, நேற்று தொடங்கி வருகின்ற ஏப்ரல் 29 திகதி வரை 14 நாள்களுக்கு அவசரகால நிலையை அதிகாரிகள் அறிவித்துள்ளனர்.
நேற்று இரவு ருவாங் எரிமலையிலிருந்து சாம்பல் வெடிப்பகளை தொடர்ந்து அருகில் உள்ள தொடர்பு கொள்ளும் நெட்வொர்க்களும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அந்த எரிமலையை சுற்றி 4 கி.மீ சுற்றளவுக்குள் குடியிருப்பாளர்களோ சுற்றுலாப் பயணிகளோ நுழைவதற்கு அனுமதியில்லை என்றும் சுற்றியுள்ளவர்கள் கவனமாக இருக்குமாறும் அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.