Latestமலேசியா

இந்தோனேசியாவுக்கு எதிராக இழப்பீடு கோர வேண்டும் – லிம் குவான் எங் வலியுறுத்தல்

கோலாலம்பூர், அக்டோபர் 15 – இந்தோனேசியாவில் ஏற்படும் காட்டுத் தீயால் மலேசியாவைப் பாதிக்கும் புகைமூட்டப் பிரச்சினைக்குத் தீர்வு காண, இந்தோனேசியாவுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்து இழப்பீடு கோர வேண்டுமென்று பாகான் நாடாளுமன்ற உறுப்பினர் லிம் குவான் எங் (Lim Guan Eng) வலியுறுத்தியுள்ளார்.

இந்தப் புகைமூட்டத்தால் பொதுமக்களின் உடல்நலம் பாதிக்கப்படுவதுடன், பள்ளிகள் மூடப்படுவதோடு, பொருளாதாரத் துறையில் பணியாற்றுவோரின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுவதாக அவர் தெரிவித்தார். இந்தோனேசியாவில் காட்டுத் தீயால் பாதிக்கப்பட்ட நிலப்பரப்பு இவ்வாண்டு 3 இலட்சம் ஹெக்டேரை எட்டியுள்ளதாகவும், இது 2023ஆம் ஆண்டைவிட 70 விழுக்காடு அதிகம் என்றும் அவர் கூறினார்.

மேலும், காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த வெளிநாடுகளின் உதவியை இந்தோனேசியா ஏற்க மறுத்தால், மலேசியா சட்டரீதியான இழப்பீட்டு நடவடிக்கைகளைத் தொடங்க வேண்டும் என்று அவர் கேட்டுக்கொண்டார்.

அதேவேளையில், மலேசியா, சிங்கப்பூர், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தோனேசியா இணைந்து, காட்டுத் தீயைக் கட்டுப்படுத்த ஆண்டு முழுவதும் செயல்படக்கூடிய நிரந்தர ஆசியான் சிறப்புப் பணிக்குழுவை அமைக்கவும் அவர் முன்மொழிந்தார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!