Latestமலேசியா

இனப் பிரச்னைகளை இன்னார் தான் பேச வேண்டும் என்பதில்லை; யாரும் குரல் கொடுக்கலாம் என்கிறார் ஷெர்லீனா

கோலாலாம்பூர் – ஆகஸ்ட்-2 – ஓர் இனத்தின் பிரச்னைகளை அந்த இனத்தைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி மட்டும் தான் பேச வேண்டும் என்பதில்லை… மக்கள் பிரதிநிதி என்பவர் அனைத்து இனங்களுக்கும் பொதுவானவர்; இன-மத பின்புலம் எதுவும் பார்க்காமல் அவர் யாருக்கு வேண்டுமானாலும் பேசலாம் என்கிறார், பினாங்கு புக்கிட் பெண்டேரா நாடாளுமன்ற உறுப்பினர் ஷெர்லீனா அப்துல் ரசீட் (Syerleena Abdul Rashid).

இன்னாருக்கு இன்னார் தான் பேச வேண்டுமென நீண்ட காலமாகவே ஒரு தவறான புரிதல் நிலவுகிறது; அது காலத்திற்கு ஒவ்வாத ஒன்றென அவர் சொன்னார்.

அதே சமயம், இன பாகுபாடு போன்ற உணர்ச்சிகரமான விஷயங்களைக் கையாளும் போது, சமூகத் தலைவர்களும் நிதானமாகவும் விவேகமாகவும் நடந்துகொள்ள வேண்டும்.

உணர்ச்சிகள் குறுக்கே வரக் கூடாது; இல்லையென்றால் அரசியல் ஆதாயத்திற்காக காத்திருப்பவர்கள் குட்டையைக் குழப்பி, குளிர் காய்வார்கள் என ஷெர்லீனா எச்சரித்தார்.

மக்களும் மக்கள் பிரதிநிதிகளும் மலேசியர் என்ற உணர்வோடு செயல்பட வேண்டும்; ஆரோக்கியமற்ற பிரிவினைவாத அரசியலுக்கு அவர்கள் இடம் கொடுக்கக் கூடாது.

அனைத்து மக்கள் பிரதிநிதிகளும், இன-மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து மலேசியர்களுக்கும் குரல் கொடுக்க வேண்டுமென்பதை வலியுறுத்தி வணக்கம் மலேசியா கேட்ட போது ஷெர்லீனா அவ்வாறு கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!