Latestமலேசியா

இரண்டாம் காலாண்டில் 6% பொருளாதார வளர்ச்சி: அரசியல் நிலைத்தன்மைக்கு சான்று என அமைச்சர் ஙா கோர் மிங் வருணனை

புத்ராஜெயா, ஆகஸ்ட்-15,நாட்டின் பொருளாதாரம் 2026-ஆம் ஆண்டின் இரண்டாம் காலாண்டில் 6 விழுக்காடு என்ற வலுவான வளர்ச்சியைப் பதிவுச் செய்துள்ளது.

இது முதல் காலாண்டில் பதிவான 5.7 விழுக்காட்டை விட அதிகமாகும்.

“எதிர்பார்த்ததை விட சிறப்பான இந்த வளர்ச்சி, நாட்டின் அரசியல் நிலைத்தன்மை, பொருளாதார மீள்தன்மை மற்றும் முதலீட்டாளர்களின் நம்பிக்கையைப் பிரதிபலிக்கிறது” என வீடமைப்பு மற்றும் ஊராட்சித் துறை அமைச்சர் ஙா கோர் மிங் தெரிவித்தார்.

ஜனவரி முதல் ஜூன் வரையிலான காலக்கட்டத்தில், நாடு 147.15 பில்லியன் ரிங்கிட் வர்த்தக உபரியைப் பெற்று வரலாற்று சாதனை படைத்துள்ளது.

​அதே சமயம், முதல் காலாண்டில் அனுமதிக்கப்பட்ட 92.8 பில்லியன் ரிங்கிட் மதிப்பிலான முதலீடுகள் மூலம் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படவுள்ளன.

​”இந்த வளர்ச்சியானது மக்களுக்கு சிறந்த வாய்ப்புகளாகவும், உயர்ந்த வாழ்க்கைத் தரமாகவும் மாறுவதை உறுதிச் செய்வதே இலக்கு” என ஙா கோர் மிங் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!