Latestமலேசியா

சிறப்பு செய்யப்பட்ட பல்துறைகளில் சாதித்த 30 பெண்கள்; Avision Media ஏற்பாட்டில் Femi9 ‘சிங்கப்பெண்ணே’ விருது விழா!

கோலாலம்பூர், செப் 29 -தொழில்முனைவோர், சாதனைப் பெண்கள் மற்றும் தமிழ்ப்பள்ளி மாணவர்களை ஒரே தளத்தில் இணைக்கும் வகையில், Avision Media ஏற்பாட்டில் செப்டம்பர் 25 மற்றும் 26ஆம் தேதிகளில் புக்கிட் ஜாலில், MRANTI Park-இல் மூன்று முக்கிய நிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடைபெற்றன. இந்நிகழ்வுகளின் ஊடக பங்காளராக வணக்கம் மலேசியா இணைந்திருந்தது.

முதல் நாளான செப்டம்பர் 25ஆம் தேதி, இரண்டாவது முறையாக Sociopreneur Summit 2026 நடைபெற்றது. TikTok தொழில்முனைவோர், influencers, affiliate marketing துறையில் செயல்படுபவர்கள் மற்றும் விற்பனையாளர்களை ஒரே தளத்தில் இணைக்கும் நோக்கில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் சுமார் 200 பேர் கலந்துகொண்டனர்.

10-க்கும் மேற்பட்ட தொழில்முனைவோர் மற்றும் துறை சார்ந்த பேச்சாளர்கள் தங்களது அனுபவங்களையும் வணிக வாய்ப்புகளையும் பகிர்ந்துகொண்டனர். Pancha CEO கணேசன், Golden Shine Beauty Products உரிமையாளர் டாக்டர் ஸ்ரீலக்ஷ்மி உள்ளிட்டோர் தொழில்முனைவு, AI, வணிக வளர்ச்சி மற்றும் தங்களது பயண அனுபவங்கள் குறித்து உரையாற்றினர்.

இதனிடையே, பல்வேறு நிறுவனங்கள் தங்களது தயாரிப்புகள் மற்றும் வணிக வாய்ப்புகளையும் பங்கேற்பாளர்களுடன் பகிர்ந்துகொண்டன.

அன்றைய தினம் இரவு Femi9 Singapenne Award 2026 விருது விழா நடைபெற்றது. பெண்களுக்கான நலன் மற்றும் பராமரிப்பு சார்ந்த தயாரிப்புகளை உருவாக்கி வரும் Femi9 நிறுவனத்தின் ஆதரவுடன் நடைபெற்ற இவ்விழாவில், பல்வேறு துறைகளில் சாதனை படைத்த பெண்கள் கௌரவிக்கப்பட்டனர்.

அவர்களில், வணக்கம் மலேசியாவின் செய்திப் பிரிவுத் தலைவர், Vethakumari Vengiteson, செய்தி மற்றும் ஊடகத் துறையில் தனது 17 ஆண்டுகால பணிப் பயணத்திற்காக Femi9 Singapenne Award 2026 வழங்கி கௌரவிக்கப்பட்டார்.

அவருடன், சமூக சேவை, தொழில்முனைவு, ஊடகம், கல்வி, அழகு மற்றும் வணிகம் உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த பெண்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டன.

Pancha Productions Sdn Bhd இந்நிகழ்ச்சிக்கு ஆதரவு வழங்கியிருந்தது.

இதனைத் தொடர்ந்து செப்டம்பர் 26ஆம் தேதி, தமிழ்ப்பள்ளி மாணவர்களின் சாதனைகளை அங்கீகரிக்கும் நோக்கில் முதல்முறையாக Manavar Sadhanai Arangam 2026 நடைபெற்றது.

தேசிய மற்றும் அனைத்துலக அளவில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்த 18 தமிழ்ப்பள்ளிகளைச் சேர்ந்த 176 மாணவர்கள் இந்நிகழ்ச்சியில் அங்கீகரிக்கப்பட்டனர்.

வெறும் விருது வழங்கும் நிகழ்வாக மட்டுமின்றி, மாணவர்களுக்கு எதிர்கால கல்வி மற்றும் வாழ்க்கைப் பயணத்திற்கான வழிகாட்டுதலை வழங்கும் வகையிலும் இந்த நிகழ்ச்சி அமைந்தது.

டத்தோ கோபாலகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு நிகழ்ச்சியைத் தொடக்கி வைத்தார். Coach மோகன் சிதம்பரம் மாணவர்களுடன் இலக்குகள் மற்றும் manifestation குறித்து பகிர்ந்துகொண்டார்.

டாக்டர் மகாலெட்சுமி, பள்ளிக் கல்விக்குப் பிறகான அடுத்தகட்ட படிப்பு, துறைத் தேர்வு மற்றும் மாணவர்களும் பெற்றோர்களும் மேற்கொள்ள வேண்டிய தயாரிப்புகள் குறித்து ஆலோசனைகளை வழங்கினார்.

இரண்டு நாட்களில் நடைபெற்ற இந்த மூன்று நிகழ்ச்சிகள் மூலம், தொழில்முனைவோருக்கு வணிக வாய்ப்புகள், சாதனைப் பெண்களுக்கு அங்கீகாரம், தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு பாராட்டு மற்றும் எதிர்கால வழிகாட்டுதல் என பல்வேறு தரப்பினரையும் ஒரே மேடையில் இணைத்தது Avision Media-வின் முயற்சி.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!