
கோலாலம்பூர், ஆகஸ்ட்-14-துங்கு அப்துல் ரஹ்மான் அறவாரியம் (YTAR), குறைந்த வருமானம் பெறும் B40 குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் நலிவடைந்த சமூகத்தினருக்கான ஆதரவை மேலும் வலுப்படுத்த உறுதியளித்துள்ளது.
கோலாலம்பூர் சுல்தான் அப்துல் சமாட் கட்டடத்தில் நடைபெற்ற YTAR-ன் 60-ஆவது ஆண்டு நிறைவு கொண்டாட்ட விழாவில் உரையாற்றிய தேசிய ஒருமைப்பாட்டுத் துறை அமைச்சர் டத்தோ ஏரன் அகோ டகாங் இந்தகவலைத் தெரிவித்தார்.
கிராமப்புறங்களில் திறமையாளர்களைக் கண்டறிதல், தலைமைத்துவ பயிற்சி மற்றும் வழிகாட்டல் திட்டங்கள் மூலம் மாணவர்களின் சமூக ஏற்றத்தை உறுதிச் செய்ய YTAR பாடுபட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.
இவ்வேளையில், புகழ்மிக்க ‘துங்கு பதக்க விருது 2026’-க்கான பரிந்துரைகள் வரும் ஆகஸ்ட் 31 முதல் செப்டம்பர் 30 வரை திறக்கப்படும்.
இதற்கு, முதன்முறையாக, அனைத்து பல்கலைக்கழக பட்டதாரிகளுக்கும் சுயமாக விண்ணப்பிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது என்றார் அவர்.
நாட்டின் எதிர்காலத்தை வழிநடத்தும் சிறந்த இளம் தலைவர்களை உருவாக்குவதே இத்திட்டத்தின் இலக்காகும் என அமைச்சர் மேலும் கூறினார்.
இந்நிகழ்வில் YTAR தலைவர் Sharifah Menyalara Syed Hussein, கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹானா இயோ உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.



