புத்ரா ஜெயா, ஆக 13 – இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் மலாய்க்காரர் சமூகத்தில் 100,732 குழந்தைகள் பிறந்தன. கடந்த ஆண்டில் இதே காலக்கட்டத்தில் பிறந்த 112,197 குழந்தைகளை ஒப்பிடுகையில் இவ்வாண்டு இரண்டாவது காலாண்டில் மலாய்க்கார்களுக்கு பிறந்த குழந்தைகள் விகிதம் 10.2-ஆக குறைந்துள்ளது.
இவற்றில் பெண் குழந்தைகளைவிட ஆண் குழந்தைகள் அதிகமாக பிறந்ததாக மலேசிய கணக்கறிக்கைத்துறையின் தலைமை அதிகாரி டத்தோஸ்ரீ முகமட் உசிர் ( Mohd Uzir) கூறினார். இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் 51,759 ஆண் குழந்தைகளும் 48,973 பெண் குழந்தைகளும் பிறந்துள்ளன. ஒவ்வொரு மணிநேரமும் ஒரு நிமிடத்திற்கு 47 குழந்தைகள் என இவ்வாண்டின் இரண்டாவது காலாண்டில் 1,194 குழந்தைகள் பிறந்ததாக முகமட் உசிர் வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
30 முதல் 39 வயதுக்குட்பட்ட பெண்கள் மூலமாக 51,740 குழந்தைகளும்
40 வயது அல்லது அதற்கும் மேற்பட்ட வயதைக் கொண்டவர்கள் மூலமாக 5. 4 விழுக்காடு குழந்தைகளும் , 20 வயதுக்கும் குறைந்த பெண்கள் மூலம் 1.8 விழுக்காடு குழந்தைகள் பிறந்துள்ளன. இவற்றில் சிலாங்கூரில் அதிகமாக 19 ,320 குழந்தைகள் பிறந்த வேளையில் லபுவான் கூட்டரசு பிரதேசத்தில் குறைந்த அளவில் 324 குழந்தைகள் பிறந்தன. சீன சமூகத்தில் 9.7 விழுக்காடும், இந்திய சமூகத்தில் 3.7 விழுக்காடும் குழந்தைகள் பிறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.