Latestமலேசியா

ஈப்போவில் முதியவர் கொலை: மதுபோதையில் இருந்த அண்டை வீட்டுக்காரர் கைது; மனநல சிகிச்சை பின்னணி அம்பலம்

ஈப்போ, மே-6-ஈப்போ, தாமான் டேசா அமானில் 70 வயது மூதாட்டி ஒருவர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Pegoh Aman 2-டில் உள்ள ஒரு வீட்டில் பலத்த வெட்டுக் காயங்களுடன் அம்மூதாட்டி சடலமாக மீட்கப்பட்டார்.

இச்சம்பவம் தொடர்பாக 52 வயதுடைய அண்டை வீட்டுக்காரரைப் போலீஸார் கைதுச் செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சமயத்தில் சந்தேக நபர் மதுபோதையில் இருந்ததாகப் போலீஸார் நம்புகின்றனர்.

சம்பவ இடத்திலிருந்து சில மதுபான பாட்டில்களையும் போலீஸ் கைப்பற்றியுள்ளது.

அந்நபர் தஞ்சோங் ரம்புத்தான் மருத்துவமனையில் மனநல சிகிச்சை பெற்று வந்ததற்கான மருத்துவப் பின்னணி இருப்பதாகவும் பேராக் போலீஸ் உறுதிப்படுத்தியுள்ளது.

கொலைக்கான நோக்கம் குறித்து போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், தகவல் தெரிந்த பொது மக்கள் முன்வருமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!