Latestஉலகம்மலேசியா

பேங்கோக்கில் விமான மாறல் பயணத்தின்போது மாரடைப்பு; மலேசியர் உயிரிழப்பு

பேங்கோக், ஆகஸ்ட்-13-தாய்லாந்து தலைநகர் பேங்கோக்கில் உள்ள சுவர்ணபூமி விமான நிலையத்தில் விமானம் மாறுவதற்காகக் காத்திருந்தபோது, 53 வயது மலேசியர் ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்தார்.

​கெடாவைச் சேர்ந்த அந்த நபர், தனது குடும்பத்தினருடன் கோலாலம்பூரிலிருந்து ஜப்பானின் ஹொக்கைடோ நகருக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார்.
திங்களன்று பேங்
கோக் விமான நிலையத்தில் காத்திருந்தபோது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது.

​உடனடியாக அவர் அங்குள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டபோதிலும், இரவு 12 மணிக்கு மேல் அவர் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிப்படுத்தினர்.

​தாய்லாந்தில் உள்ள மலேசியத் தூதரகத்தின் உதவியுடன் அனைத்து சட்டப்பூர்வ நடைமுறைகளும் முடிக்கப்பட்டு, அவரது உடல் புக்கிட் காயு ஹீத்தாம் நில எல்லை வழியாக மலேசியாவுக்குக் கொண்டுவரப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!