Latestமலேசியா

ஈப்போவில் ஹார்ன் அடித்ததால் ஆத்திரம்: காரின் முன் கண்ணாடியை உடைத்த மோட்டார் சைக்கிளோட்டி

​ஈப்போ, ஜூன்-6 – ஈப்போவில் நேற்று அதிகாலை 1.30 மணியளவில், கார் ஓட்டுநர் ஒருவர் ஹார்ன் அடித்ததால் ஆத்திரமடைந்த மோட்டார் சைக்கிளோட்டி, தனது ஹெல்மெட்டைக் கொண்டு காரின் முன் கண்ணாடியை (windscreen) அடித்து நொறுக்கியுள்ளார்.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீஸார் தற்போது அவ்வாடவரைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

​பாதிக்கப்பட்ட கார் ஓட்டுநர், அந்த மோட்டார் சைக்கிளோட்டி சாலையின் குறுக்கே கண்மூடித்தனமாக வந்ததால் எச்சரிக்கும் பொருட்டு ஹார்ன் அடித்துள்ளார்.

இதனால் கோபமடைந்த அந்த நபர் இந்த வன்முறையில் ஈடுபட்டுள்ளார்.

இதனால் கார் ஓட்டுநருக்கு சுமார் 1,500 ரிங்கிட் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஈப்போ போலீஸ் கூறியது.

​சம்பந்தப்பட்ட நபர் 30 வயது மதிக்கத்தக்கவர் என்றும், அவர் நீல நிற Honda Dash மோட்டார் சைக்கிளைப் பயன்படுத்தியதாகவும் நம்பப்படுகிறது.

இந்தச் சம்பவம் தொடர்பான dashcam வீடியோ காட்சிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் வேளையில், போலீஸார் அதனை ஆய்வு செய்து விசாரணையை முடுக்கி விட்டுள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!