கோலாலம்பூர், ஏப்ரல் 3 – சமீபத்தில் வெளியிடப்பட்ட தென்கிழக்காசியாவில் உணவை அதிகம் விரயமாக்கும் நாடுகளின் பட்டியலில் முதலிடம் பிடித்துள்ளது மலேசியா.
நம் நாட்டில் ஆண்டுக்கு ஒரு நபர் 91 கிலோ கிராம் உணவை விரயம் செய்வதாக கூறப்பட்டுள்ளது. .
உண்ணக்கூடிய உணவுகளும் சாப்பிட முடியாத உணவு பகுதிகளையும் உணவுக் கழிவுக் குறியீடு கணக்கெடுத்து, வீடுகளில் மொத்தமாக 2,921,577 ton உணவு விரயம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, ஒரு நபர் 86 கிலோ கிராம் உணவை விரயம் செய்யும் வீதம் இப்பட்டியலில் இரண்டாம் இடத்தில் கம்போடியாவும், Laos நாடு மூன்றாம் இடத்திலும் உள்ளது.
இப்பட்டியலில் 8ஆம் இடத்தில் சிங்கப்பூரும் 10ஆம் இடத்தில் இந்தோனேசியாவும் இடம்பிடித்திருப்பதும் குறிப்பிடத்தக்கது.