Latestஉலகம்

உலகின் மிகப்பெரிய கிரிப்டோ நாணயத் திருட்டு: Binance தளத்தில் $6.3 பில்லியன் களவு; வடகொரியா மீது சந்தேகம்

வாஷிங்டன், அக்டோபர்-31 – உலகின் மிகப்பெரிய கிரிப்தோ நாணயப் பரிவர்த்தனை நிறுவனமான Binance-ஸிலிருந்து, சுமார் 6.3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான கிரிப்தோ நாணயங்கள் இணைய ஊடுருவல் மூலம் திருடப்பட்டுள்ளன.

வரலாற்றிலேயே மிகப்பெரிய கிரிப்தோ நாணயத் திருட்டாக இது கருதப்படுகிறது.

இச்சம்பவத்தின் பின்னணியில், வடகொரியாவுடன் தொடர்புடைய TraderTraitor என்ற இணைய ஊடுருவல் கும்பல் இருக்கலாம் என அமெரிக்கப் புலனாய்வு நிறுவனங்கள் சந்தேகிக்கின்றன.

வெறும் 20 நிமிடங்களில், கிரிப்தோ நாணயப் பரிவர்த்தனையில் டிஜிட்டல் மயமாக்கப்பட்ட கணக்கேடான 10 blockchain வலையமைப்புகள் வழியாக இந்தப் பெரும் தொகை திருடப்பட்டுள்ளதாம்.

இதுவரை சுமார் 3 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பிலான சொத்துகள் முடக்கப்பட்டுள்ள நிலையில், வாடிக்கையாளர்களின் இழப்புகளை ஈடுசெய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என Binance நிறுவனம் உறுதியளித்துள்ளது.

எனினும், இந்த இணையத் தாக்குதலுக்கு வடகொரியாவே காரணம் என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!