Latestமலேசியா

எதிர்வரும் அக்டோபர் பத்தாம் தேதி பெல்லா அஸ்டில்லாவைக் கரம் பிடிக்கிறார் சையிட் சாடிக்

கோலாலம்பூர், ஆகஸ்ட்-19-ஜோகூர், மூவார் நாடாளுமன்ற உறுப்பினர் சையிட் சாடிக் சையிட் அப்துல் ரஹ்மான் எதிர்வரும் அக்டோபர் பத்தாம் தேதி பாடகியும் நடிகையுமான பெல்லா அஸ்டில்லாவைத் திருமணம் புரிந்து கொள்ளவிருக்கிறார். அவர்களது திருமணம் உலகின் இரண்டாவது மிக உயரமான கட்டிடடமான Menara Merdeka Maybankக்கின் 118-வது தளத்தில் நடைபெறவிருக்கிறது.

குடும்பத்தினரின் விருப்பத்திற்கேற்ப, தங்கள் திருமணம் அரபு அல்லது இஸ்லாமியக் கூறுகள் கலந்த முழு-வேலை கருப்பொருளில் அமைந்திருக்கும் என MeleTOP எனும் பொழுதுபோக்கு நிகழ்ச்சியின் நேரலையில் அவர்கள் அத்தகவலைப் பகிர்ந்து கொண்டனர். அந்நிகழ்ச்சியின் போது பாரம்பரியமான முழு-வெள்ளை நிற ஆடைகளை அணிந்திருந்த அவ்விருவரும் இடம் பெற்ற ஒரு சிறப்பு காணொளியும் ஒளிபரப்பப்பட்டது.

நிச்சயதார்த்தம் அறிவிக்கப்பட்டதிலிருந்து பொதுமக்களிடமிருந்து கிடைத்த பிரார்த்தனைகள், ஆலோசனைகள், அத்துடன் பல்வேறு ஏற்பாடுகள் ஆகியவற்றைக் கருத்தில் கொண்டே அக்டோபர் 10-ஆம் தேதியைத் தேர்ந்தெடுக்கும் முடிவு எடுக்கப்பட்டதாக சையிட் சாடிக் குறிப்பிட்டார். கோலாலம்பூர், மூவார் மற்றும் சபாவில் பல்வேறு நிகழ்வுகளுடன் சேர்த்து, அதே மாதத்தில் தங்கள் திருமண வரவேற்பு நிகழ்ச்சியையும் நடத்த அவ்விருவரும் திட்டமிட்டுள்ளனர்.

இவ்வேளையில், Menara Merdeka Maybank வளாகத்தில் தங்கள் திருமணச் சடங்கை நடத்த அனுமதி அளித்ததற்காக அதன் நிர்வாகத்தினருக்கு சையிட் சாடிக் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

ரசிகர்களால் ‘BASS’ என அன்புடன் அழைக்கப்படும் சையிட் சாடிக்- பெல்லா அஸ்டில்லா 2025-ஆம் ஆண்டில் நெருக்கமானதாகக் கூறப்படுகிறது. பின்னர் அவர்கள் மார்ச் 28-ஆம் தேதி நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர். அவர்களது திருமணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தியிருந்த நிலையில் அத்தேதி தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பெல்லாவிற்கு முந்தைய திருமணத்தின் மூலம் இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!