அலோர் ஸ்டார், ஜூலை-10, கெடா, கூலிமில் உள்ள கம்போங் பாடாங் ஊபியில் (Kampung Padang Ubi) எலி பாசனம் கலந்த பொறியை (Keropok) உண்ட 2 சகோதரர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
தனது மூத்த மகனான 3 வயது Muhammad Akil Syauqi இன்று காலை 8.30 மணிக்கு மரணமடைந்ததை அவரின் தந்தை உறுதிபடுத்தினார்.
சிகிச்சையின் போதே மகனின் உயிர் பிரிந்த நிலையில், சவப்பரிசோதனை முடிந்து கூலிமுக்கு உடல் கொண்டுச் செல்லப்படுமென்றார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை வீட்டில் இரு பிள்ளைகளும் வாந்தி எடுத்து, வாயில் நுரைத் தள்ளியதை அடுத்து அவர்களை தாயார் மருத்துவமனைக்குக் கொண்டுச் சென்ற போது, அவர்கள் நச்சுணவுப் பாதிப்புக்கு ஆளானது தெரிய வந்தது.
குரங்குகளைப் பிடிப்பதற்காக வீட்டுத் தோட்டத்தில் இரும்பு வேலிக் கம்பியில் வைக்கப்பட்டிருந்த பொறியை அவர்கள் உண்டிருக்கலாம் என நம்பப்படுகிறது.
பாதிக்கப்பட்ட இளைய சகோதரனான 2 வயது பையன் இன்னமும் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளான்.