கோலாலம்பூர், ஏப் 24 – முன்னாள் பிரதமர் Abdullah Ahmad Badawi IJN எனப்படும் தேசிய இருதய சிகிச்சை மையத்தில் தற்போது சிகிச்சை பெற்றுவருகிறார்.
உடலில் பிராணவாயு குறைந்ததைத் தொடர்ந்து சிகிச்சைக்காக அப்துல்லா IJN-னில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அவரது மருமகன் கைரி ஜமாலுடின் தெரிவித்தார்.
அவரது நிலைமை சீராக இருந்தபோதிலும் மருத்துவரின் கண்காணிப்புக்காக அவர் இன்னமும் IJN தீவிர கண்காணிப்பு பிரிவில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எனினும் அவருக்கு போதுமான ஓய்வு தேவைப்படுவதாக இன்ஸ்டாகிரோமில் கைரி பதிவிட்டுள்ளார்.
இப்போதைக்கு மருத்துவமனையில் Abdulla Ahmad Badawi- யை பார்ப்பதற்கு வருகையாளர்கள் எவருக்கும் அனுமதியில்லை என்று கைரி ஜமாலுடின் தெரிவித்துள்ளார்.
தேசிய இருதய சிகிச்சை மையத்தின் இருதய நிபுணர் டாக்டர் Azmee Ghazi தற்போது Abdullah-வை கவனித்து வருகிறார்.
அப்துல்லா படாவி மறதி நோய்க்கு உள்ளாகியிருப்பதாக 2020ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் கைரி தெரிவித்தார்.
பிரதமர் பதவியிலிருந்து 2009ஆம் ஆண்டு விலகியது முதல் மனநல குறைபாடு அறிகுறி அப்துல்லாவுக்கு இருப்பது தெரியவந்ததாக அம்னோ இளைஞர் பிரிவின் முன்னாள் தவைருமான கைரி ஜமாலுடின் கூறினார்.