
கோலாலம்பூர், ஏப் 23 – ஒரு மளிகைக் கடையில், வாடிக்கையாளர் ஒருவர்
Touch ‘n Go e-wallet மூலம் ஒரு பை நிறைய பொருட்களை வாங்கிவிட்டு, அங்கிருந்து கட்டணமாக ஒரு காசு மட்டும் கொடுத்துவிட்டு வெளியேறிவிட்டதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சம்பவம் சமூக ஊடகங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதனுடன், இதுபோல ஆகிவிடாதீர்கள்; எல்லா விதமான பொருட்களையும் வாங்கிவிட்டு, ஒரு காசு மட்டும் செலுத்திவிட்டு ஓடிவிடாதீர்கள் என்ற எச்சரிக்கை வாசகமும் இடம்பெற்றுள்ளது.
X தளத்தில் பரவலாகப் பகிரப்பட்ட 20 வினாடி காணொளி ஒன்றில், பணம் செலுத்தும் இடத்தில் பல பொருட்களுடன் ஒருவர் நிற்பது தெரிகிறது.
அங்கு, கடைக்காரர் அந்தப் பொருட்களை ஸ்கேன் செய்த பிறகு, விவேக தொலைபேசி வழியாக QR குறியீட்டைப் பயன்படுத்தி பணம் செலுத்தப்படுகிறது.
முழுத் தொகையையும் செலுத்துவதற்குப் பதிலாக, அந்த நபர் ஒரு சென் செலுத்தியதாக நம்பப்படுகிறது.
சவுண்ட்பாக்ஸ் கருவியிலிருந்து உறுதிப்படுத்தும் தகவல் வந்தவுடன் கேஷியர் “நன்றி” என்று பதிலளித்தவுடன் பொருட்களை வாங்கிய நபர் அப்பொருட்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்றுவிட்டார்.
அதன் பின் பரிவர்த்தனைத் தொகையைக் கேட்ட சில கணங்களுக்குப் பிறகு, கேஷியர் அந்த முரண்பாட்டை உணர்ந்ததாகத் தெரிகிறது. QR கட்டணச் செயல்முறையின் போது இந்தச் சம்பவம் வேண்டுமென்றே செய்யப்பட்டதா அல்லது உண்மையான உள்ளீட்டுப் பிழையா என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை



