கோலாலாம்பூர், ஆகஸ்ட்-1 அமெரிக்கக் கடற்படையின் அணுசக்தியில் இயக்கும் விமானம் தாங்கி கப்பலை மலாக்கா நீரிணையில் கண்ணெதிரில் கண்டு மெய்சிலிர்த்துள்ளது மலேசிய மீனவர்கள் குழுவொன்று.
அந்த CVN 71 ராட்சத கப்பல், மீனவர்களின் படகைக் கடந்து எதிர்திசையில் செல்லும் காட்சி, Goody Malaysia-வின் facebook-கில் பகிரப்பட்டுள்ளது.
அவ்வீடியோ இதுவரை கிட்டத்தட்ட 80,000 பார்வைகளைப் பெற்றுள்ளதோடு, 900 likes-களை நெருங்கி வருகிறது.
இவ்வேளையில், அந்த ராட்சத கப்பல்களின் ‘தரிசனம்’ அரிதாகக் கிடைப்பது உண்மைதான் என்றாலும், மீனவர்களின் பாதுகாப்புக் குறித்து நெட்டிசன்கள் கவலைத் தெரிவித்தனர்.
விமானம் தாங்கிக் கப்பல்களுக்கு அவ்வளவு நெருக்கத்தில் சிறியப் படகுகள் செல்வது பாதுக்காப்பானது அல்ல என அவர்கள் ஒருவர் குறிப்பிட்டார்.
எனினும், மலாக்கா நீரிணையில் ராட்சதக் கப்பல்களை மலேசியர்கள் இது போல் நேருக்கு நேர் ‘எதிர்கொள்வது’ இது முதன் முறையல்ல.
சில மாதங்களுக்கு முன் கூட, அதே நீரிணையில், இன்னொரு மலேசிய மீனவர்கள் குழு, இந்தியக் கடற்படை நீர்மூழ்கிக் கப்பல்களைச் சந்தித்தது குறிப்பிடத்தக்கது.