Latestஉலகம்

கனடாவில் வரலாறு; ஒண்டாரியோவின் முதல் AI இணை அமைச்சராக தமிழீழ வம்சாவளி விஜய் தணிகாசலம் நியமனம்

டொரோண்டோ, செப்டம்பர்-13,​கனடாவின் ஒண்டாரியோ மாநிலத்தில், தொழில்நுட்பத் துறையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

ஒண்டாரியோவின் முதலாவது AI பயன்பாட்டு இணை அமைச்சராக தமிழீழ வம்சாவளியைச் சேர்ந்த விஜய் தணிகாசலம் நியமிக்கப்பட்டுள்ளார்.

​இந்த முக்கியப் பொறுப்பைத் தமக்கு வழங்கியதற்காக ஒண்டாரியோ பிரீமியர் Doug Forr-டுக்கு விஜய் தணிகாசலம் நன்றித் தெரிவித்தார்.

​அமெரிக்கப் பொருளாதார அச்சுறுத்தல்களில் இருந்து ஒண்டாரியோவைப் பாதுகாக்கும் அதே வேளையில், உள்ளூரிலேயே AI சார்ந்த பொருளாதார வாய்ப்புகளை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

​ஒண்டாரியோவே AI-யின் பிறப்பிடம் எனக் குறிப்பிட்ட அவர், ஒண்டாரியோவைக் கனடாவின் ‘AI தலைநகரமாக’ மாற்றுவதே தமது இலக்கு என்றும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

2023-ஆம் ஆண்டில் ஒண்டாரியோவில் அமைச்சரவைப் பதவியை வகித்த முதல் தமிழ் அரசியல்வாதி என்ற வரலாற்றைப் படைத்தவர் விஜய் தணிகாசலம்.

அப்போது, திருக்குறளின் மீது மீண்டும் ஒருமுறை பதவிப் பிரமாணம் செய்து கொண்டதன் மூலம், தனது தமிழ் மரபுடனான ஆழமான தொடர்பையும் வெளிப்படுத்தி அவர் பிரபலமானார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!