Latestமலேசியா

பக்தி, சேவை, ஒற்றுமையால் சமூகத்தை வலுப்படுத்தலாம்; தேசிய சீரடி சாயி மாநாட்டில் சிவகுமார் வலியுறுத்தல்

தாப்பா, செப்டம்பர்-12-பேராக், தாப்பா, சீரடி சாயி ஹில்ஸில் மலேசிய சீரடி சாயி பாபா சங்கம் நடத்திய தேசிய சீரடி சாயி மாநாட்டில், மலேசிய இந்து ஆலயங்கள் மற்றும் இந்து அமைப்புகள் பேரவையான மஹிமாவின் தலைவர் டத்தோ சிவகுமார் நடராஜா கலந்து கொண்டார்.

நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்து சமயம் என்பது தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்பட்டு வரும் ஆன்மீக மதிப்புகள் மற்றும் பாரம்பரியங்களால் செறிவூட்டப்பட்ட ஒரு துடிப்பான கலாச்சாரம் என்று சுட்டிக் காட்டினார்.

நமது சமூகத்தை வலுப்படுத்துவதற்கு பக்தி வழி நம்பிக்கை, சுயநலமற்ற சேவை மற்றும் நல்லிணக்க ஒற்றுமை ஆகிய மூன்று முக்கியக் கோட்பாடுகளைப் பின்பற்றுமாறு அவர் வலியுறுத்தினார்.

நம்பிக்கை நமக்கு வலிமையையும், சேவை வாழ்வின் நோக்கத்தையும், ஒற்றுமை நாம் இணைந்து முன்னோக்கிச் செல்வதற்கான ஆற்றலையும் தருகிறது என்றார் அவர்.

இக்கோட்பாடுகளைப் பின்பற்றுவதன் மூலம் வருங்கால சந்ததியினருக்கு மேலும் அன்பும் ஒற்றுமையும் கொண்ட சமூகத்தை உருவாக்க முடியும் என்று அவர் மேலும் கூறினார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!