Latestமலேசியா

கம்பார் ஸ்ரீ ராம பக்த ஹனுமான் ஆலயம் பக்தர்கள் சுற்றுப்பயணிகளின் முக்கிய அடையாள தலமாக உருவாகும்

பேராக், கம்பாரின் ஒரு பெருமைமிகு அடையாளமாகவும், பக்தர்களையும் வருகையாளர்களையும் ஈர்க்கக் கூடிய வகையிலும் ஸ்ரீ ராம பக்தர் அனுமான் ஆலயம் உருவெடுக்கவிருப்பதாக, அங்கு வருகை மேற்கொண்ட அத்தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினர் Chong Zhemin கூறியுள்ளார்.

அவரும் Keranji சட்டமன்ற உறுப்பினர் Angeline Koo-வும், முன்னதாகக் கட்டுமானப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆலயக் குழுவினரின் தேவைகளையும்க் கேட்டறிந்தனர்.

இயற்கையான பாறை அமைப்புகளுக்கும் பசுமையான சூழலுக்கும் மத்தியில் அமைந்துள்ள இந்த ஆலயம், ஆன்மீகத்தையும் இயற்கை எழிலையும் இணைக்கும் ஒரு தனித்துவமான இடமாக விளங்குகிறது.

இந்நிலையில், அங்குக் கட்டப்பட்டு வரும் இப்புதிய ஸ்ரீ ராம பக்த ஹனுமான் ஆலயத்தை, ஒரு முக்கிய பண்பாட்டு மற்றும் சுற்றுலாத் தலமாக உருமாற்ற திட்டமிடப்பட்டுள்ளதாக Zhemin சொன்னார்.

ஆலயக் கட்டுமானப் பணிகளுக்கு முழு ஆதரவு அளிப்பதாகவும் Zhemin உறுதி வழங்கினார்.

இங்கு சுற்றுலா வாய்ப்புகளை மேம்படுத்துவதன் மூலம் உள்ளூர் பொருளாதாரமும் வளர்ச்சியடைவதோடு, இது வருங்கால தலைமுறையினர் பெருமைப்படும் அடையாளமாக மாறும் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

இந்தக் கோயிலின் நிலம் 2008ஆம் ஆண்டில் பேராக் ஆட்சிக் குழு உறுப்பினர் சிவநேசன் பெற்றுக்கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!