
கல்வித்துறை துணையமைச்சர் வோங் கா வோ நேற்று செவ்வாய்க்கிழமை ஜோகூர் ரினி தோட்டத் தமிழ்ப் பள்ளிக்கு வருகை புரிந்ததோடு அப்பள்ளியின் இணைக்கட்டடக் கட்டுமானப் பணி தொடர்பான விளக்கக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
மேலும் புதிய இணைக்கட்டடக் கட்டுமான இடத்தையும் அவர் நேரடியாக பார்வையிட்டார். 1,059 மாணவர்கள் பயிலும் இப்பள்ளிக்கான இணைக்கட்டடத்தை 4.2 மில்லின் ரிங்கிட் செலவில் கட்டுவதற்கு மடானி அரசாங்கம் இணக்கம் தெரிவித்ததைத் தொடர்ந்து அதன் கட்டுமானப் பணி இவ்வாண்டு ஜூன் மாதம் தொடங்கவிருக்கிறது.
அதன் கட்டுமானப் பணி அடுத்த ஆண்டு ஜூன் மாதம் பூர்த்தியடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிகழ்ச்சியில் துணையமைச்சருடன் Yayasan Didik Negara நிர்வாக தலைவர் முகமட் ரட்சி,ஜொகூர் மாநில கல்வி இலாகா அதிகாரிகள், இஸ்கண்டார் புத்திரி நாடாளுமன்ற உறுப்பினர் ,பள்ளி மேலாளர் வாரியம்,பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினர் மற்றும் துணைத்தலைமையாசிரியர்களும் கலந்துகொண்டனர்.



