Latestமலேசியா

கழிவுநீர்த் தொட்டியில் ஆடவரின் சடலம் மீட்கப்பட்டது தொடர்பில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் தடுத்து வைப்பு

புக்கிட் மெர்தாஜாம், செப்-10-பினாங்கு, நிபோங் திபாலில் Taman Seri Bistariயில் கழிவுநீர்த் தொட்டியில் கைகளும் கால்களும் கட்டப்பட்ட நிலையில் 50 வயது மதிக்கத்தக்க நபர் சடலமாக மீட்கப்பட்டது தொடர்பில் ஒரு பெண் உட்பட ஐந்து பேர் நான்கு நாளுக்குத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

30 வயது மதிக்கத்தக்க அந்த ஐந்து சந்தேக நபர்களையும் இன்று முதல் ஞாயிற்றுக்கிழமை வரை காவலில் வைத்து விசாரிக்க மாஜிஸ்திரேட் J. Savinder Singh அனுமதி வழங்கினார். குற்றவியல் சட்டத்தின் 365ஆவது பிரிவின் கீழ் காவல் துறை அச்சம்பவத்தை விசாரித்து வருகிறது.

அவ்வாடவர் காணாமல் போனது குறித்து குடும்பத்தினர் ஏற்கனவே புகார் அளித்திருந்த நிலையில், அவரது சடலம் வீட்டின் பின்புறம் சமையலறைக்கு அருகிலுள்ள கழிவு நீர்த்தொட்டியில் கண்டெடுக்கப்பட்டது.

வீட்டிலிருந்து துர்நாற்றம் வீசியதை அண்டை வீட்டுக்காரர் கவனித்து காவல்துறைக்கு தகவல் அளித்ததைத் தொடர்ந்து, தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினரின் உதவியுடன் காவல் துறை சடலத்தை மீட்டது. சடலம் குறைந்தது இரண்டு நாட்களாக தொட்டிக்குள் இருந்திருக்கலாம் என நம்பப்படுகிறது.

இவ்வேளையில், உயிரிழந்த ஆடவரின் வங்கிக் கணக்கிலிருந்து Sungai Bakapப்பில் உள்ள மளிகைக் கடையின் வங்கிக் கணக்கிற்கு கடந்த திங்கட்கிழமை 30,000 ரிங்கிட் மாற்றப்பட்டதாக அவரது மருமகன் இதற்கு முன் புகார் அளித்திருந்தார். அப்பணத்தை மியன்மாரில் உள்ள வங்கிக் கணக்கிற்கு மாற்றுமாறு மளிகைக் கடை உரிமையாளருக்கு உத்தரவிடப்பட்டிருந்ததும் விசாரணையில் தெரிய வந்தது குறிப்பிடத்தக்கது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!