Latestமலேசியா

காங்கார் சுங்கை பாடாங் பகுதியில் கடல்சார் அமலாக்க அதிகாரி உயிரிழப்பு; மூவர் காயம்

காங்கார், அக்டோபர் 27 – பெர்லிஸ், சுங்கை பாடாங் (Sungai Padang) கடற்பகுதியில் நேற்று நள்ளிரவு சுமார் 12.30 மணியளவில் எல்லைக் கண்காணிப்பு நடவடிக்கையில் ஈடுபட்டிருந்த மலேசிய கடல்சார் அமலாக்க அமைப்பைச் (Maritim Malaysia) சேர்ந்த அதிகாரி ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து அவருடன் பணியில் இருந்த மேலும் மூவர் காயமடைந்தனர்.

உயிரிழந்த அதிகாரிக்கு மனைவியும் 14, மற்றும் 11 வயதுடைய இரு பிள்ளைகளும் உள்ளனர். பிரேதப் பரிசோதனை முடிந்ததும், அவரது உடல் சொந்த ஊரான கெடா, குவாலா நெராங்கிற்கு (Kuala Nerang) இன்று எடுத்துச் செல்லப்படுமென எதிர்பார்க்கப்படுகிறது.

சம்பவம் தொடர்பான மேல் விவரங்களைப் பெற அதிகாரிகளைத் தொடர்புகொள்ள முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!