
கோலா நெராங் – ஆகஸ்ட் 1 – நேற்று முதல் பெடு கம்போங் பினாங்கிலுள்ள டெக்கி நெடுஞ்சாலை பாலத்தின் (Jambatan Lebuhraya Tekih, Kampung Pinang, Pedu) அருகே காணாமல் போனதாகக் கூறப்படும் பெண், சம்பவ இடத்திலிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள ஜெராம் டோக் டின் (Jeram Tok Din) ஆற்றில் மூழ்கி .உயிரிழந்துள்ளார்.
தகவல் அறிந்தவுடனேயே சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்பு வீரர்கள், நேற்றிரவு 10 மணியளவில் அப்பெண்ணை கரைக்கு கொண்டு வந்து சேர்த்தனர்.
மேலும் காணாமல் போன அந்தப் பெண்ணின் பெரோடுவா ஆக்சியா கார் பாலத்தின் மீது கண்டுபிடிக்கப்பட்டது.
நேற்று, 32 வயது மதிக்கத்தக்க அந்த பெண் காணாமல் போய் விட்ட செய்தி சமூக ஊடகத்தில் பெருமளவு பரவி வந்தது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் சம்பவத்திற்கான காரணத்தைக் கண்டறிய, போலீசார் தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.