Latestமலேசியா

காதலியின் பெயர், பிறந்த தேதியைப் போல போலி வாகனப் பதிவு எண்ணை பயன்படுத்திய 16 வயது இளைஞர் கைது

கோலாலம்பூர், நவம்பர் 3 – காதலியின் பெயர் மற்றும் பிறந்த தேதியைப் பிரதிபலிக்கும் வகையில் போலி வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்திய 16 வயது இளைஞர், கோலாலம்பூரில் சாலைப் போக்குவரத்துத் துறை (JPJ) அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார்.

இன்று காலை 10.30 மணியளவில், கோலாலம்பூர் ஜேபிஜே (JPJ) அமலாக்கப் பிரிவினர் (Unit Falcon), கேஎல்சிசி (KLCC) அருகிலுள்ள ஜாலான் அம்பாங் (Jalan Ampang) பகுதியில் சோதனை நடத்தியபோது, தப்பிச் செல்ல முயன்ற இளைஞரைப் பிடித்தனர்.

அவரிடம் செல்லுபடியாகும் ஓட்டுநர் உரிமம் இல்லாதது, வாகன வரி மற்றும் காப்புறுதி காலாவதியானது, போலி பதிவு எண் பயன்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு விதிமீறல்கள் கண்டறியப்பட்டன.

இதையடுத்து, அவரது மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டதுடன், இவ்வழக்கு 2027ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படுமென கோலாலம்பூர் சாலைப் போக்குவரத்துத் துறை இயக்குநர் ஹமிடி ஆடம் (Hamidi Adam) தெரிவித்தார்.

போலி வாகனப் பதிவு எண்ணைப் பயன்படுத்துவதும், அமலாக்க அதிகாரிகளின் உத்தரவுகளைப் பின்பற்றத் தவறுவதும் கடுமையான குற்றங்கள் என சாலைப் போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!