Latestமலேசியா

காற்று மாசு குறியீடு 100-ஐ தாண்டினால் பள்ளிகள் வெளிப்புற நடவடிக்கைகளை நிறுத்த வேண்டும்

ஜார்ஜ் டவுன், ஆகஸ்ட் 14 – பினாங்கில் காற்று மாசு குறியீடான IPU 100-ஐ தாண்டும் பகுதிகளிலுள்ள பள்ளிகள் மாணவர்களின் அனைத்து வெளிப்புற நடவடிக்கைகளையும் நிறுத்த வேண்டுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.

மிண்டன் நிலையத்தில் நேற்று மதியம் IPU 107 ஆக பதிவாகி, பின்னர் குறைந்து இரவு 8 மணிக்கு 96 ஆக பதிவானது. மிண்டன் பகுதியைச் சுற்றி நான்கு ஆரம்பப் பள்ளிகள் மற்றும் மூன்று இடைநிலைப் பள்ளிகள் உட்பட ஏழு பள்ளிகள் உள்ளன.

மாணவர்கள் முகக்கவசம் அணிந்து, அடிக்கடி தண்ணீர் குடிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். IPU 200-ஐ தாண்டினால் சம்பந்தப்பட்ட பகுதிகளில் உள்ள அனைத்து பள்ளிகளும் உடனடியாக மூடப்பட வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!