Latestமலேசியா

கிள்ளானில் ஒரு வீட்டில் RM400,000 மதிப்பிலான பட்டாசுகள் பறிமுதல்; இருவர் கைது

கிள்ளான், மார்ச் -5 -தாமான் கிள்ளான் உத்தாமாவிலுள்ள ஒரு வீட்டில் சட்டப்பூர்வ அனுமதியின்றி பட்டாசுகள், வான வெடிகளை வைத்திருந்தது மற்றும் விற்பனை செய்தது தொடர்பில் இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டனர்.

செமினி பொது நடவடிக்கை படையின் 4வது பட்டாளத்தின் விசாரணைப் பிரிவின் போலீஸ் குழுவுக்கு கிடைத்த உளவுத்துறை தகவலின் அடிப்படையில் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டது.

போலீஸ் குழுவினர் நேற்று மாலை 4 மணியளவில் அந்த வீட்டில் சோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து 29 முதல் 32 வயதுடைய இரு ஆடவர்கள் கைது செய்யப்பட்டதாக பொது நடவவடிக்கை படையின் 4ஆவது பட்டாளத்தின் அதிகாரி Superintendan Amanjit Singh தெரிவித்தார்.

மேலும் அங்கிருந்த லோரியில் 272 பெரிய பெட்டிகளில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் மற்றும் வான வெடிகளும் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு 412,740 ரிங்கிட்டாகும்.

பறிமுதல் செய்யப்பட்ட அனைத்து பொருட்களும் மற்றும் கைதானவர்களும் மேல் நடவடிக்கைக்காக வட கிள்ளான் மாவட்ட போலீஸ் தலைமையகத்திற்கு கொண்டுச் செல்லப்பட்டனர்.

 

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!