Latestமலேசியா

கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை வார்டுக்குள் புறாக்கள் புகுந்து அட்டகாசம்; காணொளி வைரல்

கிள்ளான் தெங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனையின் வார்டுக்குள் புறாக்கள் நுழைந்து அங்குள்ள நோயாளியின் பாத்திரங்களில் உள்ள உணவுகளை உட்கொள்வது தொடர்பான காணொளி ஒன்று ‘த்ரெட்ஸ்’ (Threads) தளத்தில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து அந்த விவகாரம் குறித்து , அந்த மருத்துவமனை அடுத்தகட்ட நடவடிக்கை எடுத்துள்ளது.

மருத்துவமனையைச் சுற்றியுள்ள மரங்கள் நிறைந்த பகுதிகளைப் புறாக்களும் காகங்களும் வாழ்விடமாகப் பயன்படுத்துகின்றன என்று அந்த மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில் விளக்கியுள்ளது.

இந்த நிலைமையால், பறவைகள் தற்செயலாக மருத்துவமனை கட்டிடப் பகுதிக்குள் நுழைய வாய்ப்புள்ளது.

இந்த பிரச்னையை கையாள்வதற்காக, Hospital Tengku Ampuan Rahimah, ஒப்பந்த நிறுவனத்தினரால் மரங்களை வெட்டி ஒழுங்குபடுத்துதல், wad பகுதி மற்றும் மருத்துவமனை கட்டிடத்தில் தொடர்ச்சியான கண்காணிப்பு உள்ளிட்ட வழக்கமான கட்டுப்பாட்டு நடவடிக்கைகளைச் செயல்படுத்தியுள்ளது.

இதுதவிர , மருத்துவமனைப் பகுதியில் பறவைகளால் ஏற்படும் தொல்லைகளைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை வலுப்படுத்த, ஊராட்சி மன்ற அதிகாரிகளின் ஒத்துழைப்பையும் கோரப்பட்டுள்ளது.

இந்த விவகாரத்தை மருத்துவமனை நிர்வாகம் தீவிரமாகக் கருதுவதோடு , மருத்துவமனைச் சூழல் எப்போதும் பாதுகாப்பாகவும், தூய்மையாகவும், நோயாளிகள், பார்வையாளர்கள் மற்றும் மருத்துவமனை ஊழியர்களின் நல்வாழ்வுக்கு உகந்ததாகவும் இருப்பதை உறுதிப்படுத்தும்.

இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நிகழும் அபாயத்தைக் குறைக்க, அனைத்து உரிய நடவடிக்கைகளும் அவ்வப்போது தொடர்ந்து செயல்படுத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!