
கோலாலம்பூர், ஜூன்-8-நிர்வாக சீர்திருத்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, கோலாலம்பூர் மாநகர் மன்றத்தின் ஒருமுக சிறப்பு நிர்வாக மையத்தின் பங்கை முடிவுக்குக் கொண்டுவர அரசாங்கம் திட்டமிட்டுள்ளது.
சீரமைப்பு செயல்திட்டத்தின் ஒரு பகுதியாகவும், நகர்ப்புற திட்டமிடல் அமைப்பில் நேர்மையை வலுப்படுத்தும் முயற்சிகளில் ஒன்றாகவும் இந்த திட்டம் இருப்பதாக பிரதமர் துறையின் கூட்டரசு பிரதேச அமைச்சர் ஹன்னா யோ( Hannah Yeoh ) தெரிவித்தார்.
பிரதமரின் ஆலோசனைக் குழுவின் கீழ் செயல்படும் ஒரு சிறப்புப் பணிக்குழுவான ‘புராஜெக்ட் கேப்பிட்டலின் பரிந்துரையின் அடிப்படையில் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
வளர்ச்சி முடிவெடுக்கும் செயல்பாட்டில் தலையிடுவதற்கான ஒரு வழியாக சிறப்பு உள்ளூர் மத்தியக் குழு மாறும் சாத்தியம் இருப்பதாக அந்தப் பணிக்குழு கண்டறிந்தது.
“சட்டம் மற்றும் சரியான திட்டமிடல் கொள்கைகளைத் தவிர வேறு காரணங்களால் ஒரு முடிவு பாதிக்கப்படலாம் என்ற கருத்தையோ அல்லது தலையீட்டிற்கு வழிவகுக்கும் எந்தவொரு கட்டமைப்பையும் மடானி அரசாங்கத்தால் நியாயப்படுத்த முடியாது.
அதனால்தான், கோலாலம்பூர் ஊராட்சித் திட்டம் , அது தொடர்பான சட்டம் பின்பற்றப்படுவதோடு வெளிப்படையான செயல்முறையைப் கடைப்பிடிக்கும் விவகாதரத்தில் தெளிவான கொள்கைகளுக்கு நாங்கள் திரும்ப விரும்புகிறோம் என்று இன்று தனது முகநூலில் ஹன்ன யோ பதிவிட்டுள்ளார்.



