
பந்திங், அக்டோபர்- 8,
நேற்று, கிள்ளான், பந்திங், போர்ட்டிக்சன் சாலையின் 38வது கிலோமீட்டர் பகுதியில் ‘டொயோட்டா அல்பார்டு’ கார், லாரியுடன் மோதியதில் இரண்டு பேர் காயமடைந்தனர்.
மொரீப்பிலிருந்து பந்திங் நோக்கி சென்று கொண்டிருந்த லாரியின் பாதையில், எதிர் திசையிலிருந்து வந்த அல்பார்டு வாகனம் திடீரென கட்டுப்பாட்டை இழந்து நுழைந்ததால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் அல்பார்டு வாகனத்தை செலுத்தி வந்த 40 வயது மதிக்கத்தக்க உள்ளூர் பெண் மற்றும் 30 வயது மதிக்கத்தக்க வெளிநாட்டு லாரி ஓட்டுநர் இருவரும் காயமடைந்து பந்திங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டனர்.
முதல் கட்ட விசாரணையில் இருவரும் செல்லுபடியான ஓட்டுநர் உரிமம் பெற்றவர்கள் என உறுதி செய்யப்பட்டாலும், போலீஸ் தரப்பு தங்களின் மேல் விசாரணையைத் தொடங்கியுள்ளது