Latestமலேசியா

குடிபோதையை விட கவனக்குறைவாக வாகனமோட்டுவதே அதிக உயிரிழப்புகளுக்கு காரணம்

கோலாலம்பூர், ஏப்ரல்-4-நாட்டில் மரண சாலை விபத்துகளுக்கான முக்கியக் காரணம் குடிபோதையில் வாகனமோட்டுவது அல்ல… மாறாக, அலட்சியம் மற்றும் கவனக்குறைவே என தெரியவந்துள்ளது.

CITM எனப்படும் மலேசியப் பட்டய தளவாட மற்றும் போக்குவரத்துக் கழகத்தின் அண்மைய ஆய்வின்படி, தினமும் சராசரியாக 18 பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர்.

ஆனால், குடிபோதையில் வாகனமோட்டுவதால் ஏற்படும் மரணங்கள், இதில் ஒரு சிறிய பகுதியே என, CITM தலைவர் Zaly Shah கூறினார்.

விபத்துகளுக்கான முக்கியக் காரணங்களாக இருப்பவை…அதிக வேகம், ஆபத்தான முறையில் முந்திச் செல்லுதல் மற்றும் ஓட்டும் போது கவனம் சிதறுவது போன்ற பாதுகாப்பற்ற ஓட்டப்பழக்கங்களே என்றார் அவர்.

மழை உட்பட இயற்கைக் காரணங்கள், குண்டு குழியுமான சாலைகள் போன்ற வசதிக் கட்டமைப்பு கோளாறுகளாலும் இந்தக் கவனக்குறைவு சம்பவங்கள் ஏற்படுகின்றன.

“எனவே, மதுபோதையில் வாகனமோட்டும் சம்பவங்களை குறிப்பிட்ட ஓர் இனத்துடன் முடிச்சுப்போடுதல் கூடாது. விபத்துகளின் ‘கண்களுக்கு’ என்ன இனம், மதம், வயது, பாலினம் எனத் தெரியாது” என்றார் அவர்.

குடிபோதையில் வாகனமோட்டுவது ஒரு கடுமையான குற்றமாக இருந்தாலும், அதில் மட்டுமே கவனம் செலுத்துவது, சாலை பாதுகாப்பின் பெரிய மற்றும் உண்மையான பிரச்சனையை மறைக்கக்கூடும் என அவர் எச்சரித்தார்.

எனவே, அதிகப்படியான கட்டுப்பாடுகள் மற்றும் பொது மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்துவதன் மூலமாக இந்த பிரச்சனையைச் சமாளிக்க அதிகாரிகள் முனைய வேண்டுமென Zaly வலியுறுத்தினார்.

மதுபோதை மற்றும் போதைப்பொருள் தாக்கத்தில் அபாயகரமாக வாகனமோட்டி, உயிரிழப்புகளை ஏற்படுத்தும் சம்பவங்கள் அண்மையக் காலமாக அதிகரித்துள்ள நிலையில் Zaly அவ்வாறு சொன்னார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!