Latestமலேசியா

குளுவாங் கல்லூரி விடுதியில் கண்டெடுக்கப்பட்ட குழந்தை பலமுறை குத்திக் கொலை: சவப் பரிசோதனையில் அதிர்ச்சித் தகவல்

குளுவாங், ஜூலை-31 – ஜோகூர், குளுவாங்கில் கல்லூரி மாணவர் விடுதியாக செயல்பட்டு வந்த terrace வீட்டுக் கழிவறையில் கண்டெடுக்கப்பட்ட பெண் குழந்தை, மார்பில் பலமுறை குத்தப்பட்டதால் உயிரிழந்தது சவப் பரிசோதனையில் உறுதிச் செய்யப்பட்டுள்ளது.

தாமான் செத்தியா முத்தியாராவில் உள்ள ஒரு வாடகை வீட்டில் விரிவுரையாளர் ஒருவரால் இக்குழந்தை கண்டெடுக்கப்பட்டது.

சம்பவ இடத்திலிருந்து 24 சென்டி மீட்டர் நீளமுள்ள கத்தியையும் இரத்தக் கறை படிந்த ஆடைகளையும் போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர்.

​இச்சம்பவம் தொடர்பாக 19 வயது கல்லூரி மாணவியும் சக மாணவரான அவரது காதலனும் கைதாகியுள்ளனர்.

இதற்கிடையில், மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்ட அந்த மாணவியின் வயிற்றில் மற்றொரு குழந்தை இருந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த இரட்டைக் குழந்தை பாதுகாப்பாகப் பிரசவிக்கப்பட்டது.

இந்த காதல் ஜோடி கடந்த சில மாதங்களாகவே உடலுறவில் ஈடுபட்டு வந்துள்ளது.

இந்நிலையில், கர்ப்பத்தைக் கலைப்பதற்காக மாணவிக்கு 450 ரிங்கிட் கொடுத்ததை, காதலன் விசாரணையில் ஒப்புக்கொண்டுள்ளார்.

அவர் தற்போது 7 நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், மாணவி மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!