
குவாந்தான் – ஆகஸ்ட் 2 – நேற்று, குவாந்தான் கிழக்கு கடற்கரை விரைவுச்சாலையில் பல்நோக்கு வாகனம் (MPV) ஒன்று கட்டுப்பாட்டை இழந்து விபத்துக்குள்ளானதில் மூன்று வங்கதேச ஆண்கள் உயிரிழந்துள்ளனர்.
இவ்விபத்தில் மேலும் இருவருக்கு லேசான காயங்கள் ஏற்பட்டு தெங்கு அம்புவான் அப்சான் மருத்துவமனையில் (HTAA) அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அந்த ஐந்து வெளிநாட்டினரும் குவாந்தானிலிருந்து கோலாலம்பூருக்கு டொயோட்டா அவன்ஸாவில் பயணித்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது என்று குவாந்தான் காவல்துறைத் தலைவர் முகமட் அட்லி மாட் தாவுத் தெரிவித்துள்ளார்.
வாகன ஓட்டுநரிடம் ஓட்டுநர் உரிமம் இல்லை என்றும், MPVயின் சாலை வரி மே மாதத்திலேயே காலாவதியாகி விட்டது என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இறந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக HTAA மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ள நிலையில் இவ்விபத்து தொடர்பான தகவல் தெரிந்த பொதுமக்கள் போலீசாரை அணுக வேண்டுமென்று கேட்டுக் கொள்ளப்பட்டனர்.