
பெந்தோங், ஆகஸ்ட் 17 — Genting Highlands-இல் உள்ள வணிக வளாக நகைக்கடையில் கொள்ளை நடந்ததாகக் கூறப்படும் தகவல் இன்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கருப்பு உடையணிந்த இருவர் பெரிய பையுடன் தப்பிச் செல்லும் காணொளியும் தற்போது வைரலாகியுள்ளது.
Threads-இல் பகிரப்பட்ட அந்தக் காணொளியைத் தொடர்ந்து, சந்தேக நபர்களைக் கண்டறிவதற்காக Genting Highlands-இலிருந்து வெளியேறும் வாகனங்கள் கடுமையான சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாக அங்கிருந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
ஒவ்வொரு வாகனத்தின் ‘boot’-ஐயும் திறந்து போலீசார் சோதனை நடத்தியதாகக் கூறப்படும் நிலையில், Genting Highlands-இலிருந்து கீழே செல்லும் சாலைகளில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சிலர் சுமார் இரண்டு மணி நேரம் நெரிசலில் சிக்கியதாகவும் சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
‘All Black’ உடையில் இருவர்… கையில் பெரிய பை… Genting-இல் என்ன நடந்தது? என்ற கேள்வி இணையத்தில் எழுந்துள்ள நிலையில், நகைக்கடை கொள்ளை குறித்த அதிகாரப்பூர்வ போலீஸ் உறுதிப்படுத்தல் இன்னும் வெளியாகவில்லை.



