
கேமரன் மலை – ஆகஸ்ட்-30 – பஹாங், கேமரன் மலையில் மரம் சாய்ந்து Perodua Alza காரின் மீது விழுந்ததில், ஒரு வெளிநாட்டு தம்பதி காயமடைந்தனர்.
தாப்பா நோக்கிச் செல்லும் Ringlet, Jalan Batu 28 சாலையில் மழையின் போது நேற்று மாலை 5 மணிக்கு அச்சம்பவம் நிகழ்ந்தது.
தீயணைப்பு – மீட்புப் படையினர் சம்பவ இடம் வந்த போது, பாதிக்கப்பட்ட இருவரும் காருக்கு வெளியே காணப்பட்டனர். சிறிய அளவில் அவர்களுக்குக் காயம் ஏற்பட்டிருந்தது.
சாலையின் குறுக்கே விழுந்த அப்பெரிய மரத்தை இரம்பத்தைக் கொண்டு அறுத்து, சாலையோரமாக தீயணைப்புக் குழுவினர் அப்புறப்படுத்தினர்.