
சண்டாக்கான், செப்டம்பர்-29,சபா, சண்டாக்கானில் உள்ள ஸ்ரீ இண்டா அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக சிக்கியிருந்த 63 வயது மூதாட்டி ஒருவர், மயக்கமுற்று பலவீனமான நிலையில் மீட்கப்பட்டுள்ளார்.
நேற்றிரவு சுமார் 7 மணியளவில் ஏற்பட்ட மின்தடை காரணமாக அந்த மூதாட்டி மின்தூக்கியில் சிக்கிக்கொண்டதாக நம்பப்படுகிறது.
தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு மற்றும் மீட்புப் படையினர், மின்தூக்கி பராமரிப்பாளர்களின் உதவியுடன் இரவு 8.14 மணியளவில் அவரைப் பத்திரமாக மீட்டனர்.
சிறப்பு உபகரணங்கள் மூலம் மின்தூக்கியின் கதவுகள் திறக்கப்பட்டபோது, காற்றுப் போதாமையால் அந்த மூதாட்டி சுயநினைவை இழக்கும் அளவுக்கு பலவீனமடைந்து கிடந்தது தெரியவந்தது.
மீட்கப்பட்ட மூதாட்டிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டுச் செல்லப்பட்டார்.
அப்பகுதியில் பாதுகாப்பு உறுதிச் செய்யப்பட்ட பின்னர், இரவு 8.35 மணியளவில் மீட்பு நடவடிக்கை நிறைவுற்றது.



