கோலாலம்பூர், ஜூன்-19 – சந்தையில் முட்டைக் கையிருப்பு போதுமான அளவில் இருப்பதாக அத்தொழில்துறையின் உத்தரவாதம் கிடைத்தப் பிறகே அரசாங்கம் முட்டை விலைக் குறைப்பை அறிவித்திருக்கிறது.
இதுவரையில் முட்டைக் கையிருப்பில் பிரச்னை இல்லை என உள்நாட்டு வாணிபம் மற்றும் வாழ்க்கைச் செலவின துணையமைச்சர் ஃபுசியா சாலே ( Fuziah Salleh) தெரிவித்தார்.
இலக்கு வைக்கப்பட்ட மானிய முறையின் கீழ் நாடு முழுவதும் கிரேட் A, B, C கோழி முட்டைகளின் விலை 3 சென் குறைவதாக அரசாங்கம் முன்னதாக அறிவித்திருந்தது.
ஆனால், பூமிபுத்ரா மளிகைக் கடை வியாபாரிகள் சங்கத் தலைவர் டத்தோ அமீர் அலி மைடின் ( Datuk Ameer Ali Mydin) அதனை அவ்வளவாக ஆதரிக்கவில்லை.
முட்டை விலையைக் குறைக்கும் முன்பாக உதவித் தொகைப் பெறப்பட்ட கோழி முட்டைக் கையிருப்பை அரசாங்கம் சந்தையில் அதிகரிக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டிருந்தார்.
அது குறித்து கருத்துரைத்த போது துணையமைச்சர் ஃபுசியா அவ்வாறு சொன்னார்.