Latestமலேசியா

சபா கினாபத்தாங்கான் குளத்தில் சிக்கிய 11 போர்னியோ பிக்மி யானைகள் மீட்பு

சபா, மே-11– சபாவின் கினாபாத்தாங்கான் (Kinabatangan) பகுதியில், தெராமாக்கோட் (Deramakot) வனக் காப்பகத்திற்கு அருகிலுள்ள கைவிடப்பட்ட குளத்தில் சிக்கியிருந்த 11 போர்னியோ பிக்மி (Pygmy Borneo) யானைகள் வெற்றிகரமாக மீட்கப்பட்டன.

மீட்கப்பட்ட யானைகளில் ஒரு குட்டி யானையும் இடம்பெற்றிருந்ததாக வனவிலங்கு துறை தெரிவித்துள்ளது.

குளத்தின் கரைகள் செங்குத்தாகவும் வழுக்கலாகவும் இருந்ததால், யானைக் கூட்டம் வெளியேற முடியாமல் சிக்கியிருந்ததாக கூறப்படுகிறது.

தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்ற கினாபாத்தாங்கான் வனவிலங்கு துறை அதிகாரிகள், யானைகள் பாதுகாப்பாக வெளியேறுவதற்காக சரிவான பாதை ஒன்றை உருவாக்கி மீட்பு நடவடிக்கையை மேற்கொண்டனர்.

அனைத்து யானைகளும் எந்தவித கடுமையான காயங்களும் இன்றி பாதுகாப்பாக மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இதேபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில், அந்த கைவிடப்பட்ட குளத்தை மூடுவதோ அல்லது பாதுகாப்பு தடுப்புகள் அமைப்பதோ அவசியம் எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!