Latestமலேசியா

சரவாக்கில் கட்டுமானப் பணியின்போது இயந்திரத்தின் சங்கிலிச் சக்கரத்தில் சிக்கி 62 வயது தொழிலாளி உயிரிழப்பு

சரவாக், அக்டோபர் 29 – சரவாக், லாவாஸ், கம்போங் லோங் தெமாரோப் அருகே, லாவாஸ்–ட்ரூசான் (Jalan Lawas-Trusan, berhampiran Kampung Long Temarob) சாலையின் 21ஆவது கிலோமீட்டரிலுள்ள கட்டுமானத் தளத்தில், இயந்திரத்தின் சங்கிலிச் சக்கரத்தில் சிக்கி 62 வயது ஆண் தொழிலாளி நேற்று உயிரிழந்தார்.

நேற்று மதியம் சுமார் 1.20 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தை உடன் பணியாற்றிய தொழிலாளர்கள் கவனித்து, இயந்திர ஓட்டுநரிடம் தெரிவித்தனர்.

லாவாஸ் மாவட்டக் காவல் தலைவர் ACP லியோங் அனாக் திண்டான் (Liong anak Tindan) கூறுகையில், இயந்திர ஓட்டுநர் சம்பவ இடத்தைச் சோதனையிட்டபோது, தாம் இயக்கிய இயந்திரத்தின் முனையில் தொழிலாளி ஒருவர் விழுந்து கிடப்பதைக் கண்டதாகத் தெரிவித்தார்.

இதையடுத்து, அவர் கட்டுமானத் தள மேற்பார்வையாளருக்குத் தகவல் அளித்ததுடன், காவல்துறையிலும் புகார் செய்தார்.

சம்பவத்திற்கான உண்மையான காரணம் குறித்து காவல்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவ்வழக்கு 1987ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின்ன் கீழ் விசாரிக்கப்படுகிறது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!