
ஜோகூர் பாரு, ஏபர்ல்-13-KLS Saree Couture சாரி கடை நேற்று ஜோகூர் பாருவில் அதன் புதியக் கிளையைத் திறந்தது.
ஸ்கூடாய், தாமான் யுனிவர்சிட்டி, ஜாலான் கெபுடாயான் 6 எனும் முகவரியில் இதுநாள் வரை முதல் மாடியில் இயங்கி வந்த நிலையில், இப்புதியக் கடை கீழ் தளத்தில் திறக்கப்பட்டுள்ளது.
கனகேஸ்வரி ராஜகோபால், ஷாமினி ராஜகோபால், லிவ்யா ஸ்ரீ பாஸ்கரன் ஆகிய 3 சகோதரிகள் இதனை நடத்தி வருகின்றனர்.
இந்த சாரிக் கடையைத் திறக்கும் சிந்தனைத் தோன்றியது குறித்து வணக்கம் மலேசியாவிடம் பகிர்ந்தார் கனகேஸ்வரி
முதல் மாடிக் கடைக்கு வாடிக்கையாளர்களிடமிருந்து கிடைத்த அமோக வரவேற்பே, கீழ் தளத்தில் புதியக் கடையைத் திறக்க வழி வகுத்துள்ளது.
வணிக விரிவாக்கம், வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஏராளமான தேர்வுகளை வழங்குமென்ற எண்ணத்தில் அம்முடிவுக்கு வந்ததாக அவர் சொன்னார்.
சகோதரிகளாக இருப்பது வணிகத்தை நடத்துவதை இவர்களுக்கு எளிதாக்கியுள்ளது.
ஒரே குழு உணர்வில் உழைப்பைப் போடுவதால், இன்றைய நிலைக்கு உயர்ந்திருப்பதாக அவர் பெருமிதம் தெரிவித்தார்.
இவ்வேளையில், இந்த KLS Sarees Couture சாரிக் கடையில் இருக்கும் சாரி வகைகள், எந்த மாதிரியான எதிர்பார்ப்புடன் வாடிக்கையாளர்கள் இவர்களைத் தேடி வரலாம் என்பது போன்ற விஷயங்களை, மற்ற இரு சகோதரிகளான ஷாமினியும், லிவ்யாவும் பகிர்ந்துகொண்டனர்.
எனவே, ஸ்கூடாய் மக்களே, உங்களின் சாரித் தேவைக்கு, நீங்கள் எதிர்பார்க்கும் தரத்தில், அழகில் கிடைக்க உங்களுக்கு முக்கியத் தேர்வாக இந்த KLS Saree Couture அமையும் என்றால் மிகையில்லை.
இப்புதியக் கிளைக்குச் சென்று உங்களுக்குத் தேவையானதை நீங்கள் வாங்கலாம்…



