Latestமலேசியா

சிகரெட் துண்டுகள் வீசினர் இருவருக்கு 1,300 ரிங்கிட் அபராதம் சமூக சேவை செய்யும்படி உத்தரவு

கோலாலம்பூர், மே 19 – ஐந்து மாதங்களுக்கு முன்பு ஒரு பொது இடத்தில் சட்டவிரோதமாக சிகரெட் துண்டுகளையும் பலகைக் கட்டைகளையும் வீசியதை ஒப்புக்கொண்ட இருவருக்கு, கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் இன்று தலா 1,300 ரிங்கிட் அபராதம் விதித்து, நான்கு மணி நேர சமூக சேவை உத்தரவையும் பிறப்பித்தது.

காப்பிக் கடை ஊழியரான 35 வயதான அகமட் பர்ஹான் அப்துல் கனி (Ahmad Farhan Abdul Ghani ) மற்றும் , 48 வயதுடைய பழ விற்பனையாளர் முகமட் ஹபிசி முகமட் ரிடுவான் ( Mohd Hafizi Mohd Reduan) ஆகிய இருவரும் அபராதத்தைச் செலுத்தத் தவறினால் ஒரு மாதம் சிறைத் தண்டனையை அனுபவிக்கும்படி நீதிபதி சித்தி ஷகிரா மோதாருடின் (Siti Shakirah Mohtaruddin) உத்தரவிட்டார்.

தனித்தனியாகக் குற்றம் சாட்டப்பட்ட அந்த இரு நபர்களும், இன்று முதல் ஒரு மாதத்திற்குள் நான்கு மணி நேர சமூக சேவை உத்தரவை முடிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டது.

ஜனவரி 3 ஆம் தேதி, இரவு மணி 7.06க்கு புக்கிட் பிந்தாங் அருகே ஒரு ஹோட்டல் கட்டிடத்திற்கு அருகில், சிகரெட் துண்டுகளை அதற்கென ஒதுக்கப்பட்ட கொள்கலனில் போடாமல், பொது இடத்தில் வீசியதாக அகமட் பர்ஹான் மீது குற்றம் சாட்டப்பட்டது.

ஜனவரி 17 ஆம் தேதியன்று பிற்பகல் மணி 3.40 க்கு ஜாலான் ஈப்போ, பூசாட் பண்டார் உத்தாரா செலயாங்கில் ஒரு கடைக்கு முன்னால் பலகை மரக்கட்டைகள் மற்றும் வணிகக் கழிவுகளைக் கொட்டியதாக முகமது ஹபிஸி மீது குற்றம் சாட்டப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!