Latestமலேசியா

சிரம்பானில் நான்கு வீடுகள் தீயில் சேதம்; 17 பேர் பாதுகாப்பாக மீட்பு

சிரம்பான், அக்டோபர் 26 – நெகிரி செம்பிலான் சிரம்பான் (Seremban), அம்பாங்கான் யூடிசி (UTC Ampangan) பின்புறமுள்ள நான்கு வீடுகள், நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தில் சுமார் 80 விழுக்காடு வரை சேதமடைந்தன.

இரவு 8.17 மணிக்கு தீ விபத்து குறித்து அவசர அழைப்பு கிடைத்ததாக சிரம்பான் தீயணைப்பு மற்றும் மீட்புப் படையின் மூத்த அதிகாரி ரைஹான் சே மாட் (Raihan Che Mat) தெரிவித்தார்.

தீயைக் கட்டுப்படுத்த சிரம்பான், அம்பாங்கான் மற்றும் சிரம்பான் 2 தீயணைப்பு நிலையங்களைச் சேர்ந்த வீரர்கள் இணைந்து போராடினர்.

இந்தத் தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. நான்கு வீடுகளிலும் இருந்த 17 பேரும் பாதுகாப்பாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!