சிரம்பான், செப்டம்பர்-30, சிரம்பான் Taman Chip Aik வீடமைப்புப் பகுதியில் வீட்டுக்கு வெளியே காய வைக்கப்பட்ட துணிகளை, மர்ம நபர் 3 முறை களவாடிச் சென்றுள்ளார்.
ஆகக் கடைசியாக வெள்ளிக்கிழமையன்று அவ்வாடவர் வேலையைக் காட்ட, அது அவ்வீட்டின் CCTV கேமராவில் பதிவாகி வைரலானது.
நீல நிற காரில் வந்திறங்கும் ஆடவர், காரின் பின் கதவைத் திறந்து, அங்கு காயப்போடப்பட்டிருந்த துணிகளை அப்படியே அள்ளி காருக்குள் போடுவது அந்த வீடியோவில் தெரிகிறது.
மற்றொரு கட்டையில் மாட்டப்பட்டிருந்த துணிகளில் சிலவற்றையும் எடுத்துகொண்டு அவர் கம்பி நீட்டினார்.
இதையடுத்து வீட்டுக்காரர் செய்த போலீஸ் புகாரின் அடிப்படையில் 30 வயது சந்தேக நபர் நேற்று காலை கைதானார்.
திருடப்பட்ட துணிமணிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.
அவ்வாடவரைப் பிடிக்க தகவல்களை தந்துதவிய பொது மக்களுக்கும் சிரம்பான் போலீஸ் நன்றித் தெரிவித்துக் கொண்டது.