
கோலாலம்பூர், வாங்சா மாஜுவில் உள்ள ஜாலான் Genting klang போக்குவரத்து சந்திப்பில், சிவப்பு சமிக்ஞை விளக்கை மீறிச் சென்று ஒரு மோட்டார் சைக்கிள் மீது மோதிய மதுபோதையில் இருந்த BMW X1 வாகன ஓட்டுநருக்கு நீதிமன்றம் ஒரு நாள் சிறைத்தண்டனையும், RM13,000 அபராதமும் விதித்தது.
அபராதம் செலுத்தத் தவறினால் மேலும் ஆறு மாதம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் அந்த ஓட்டுநருக்கு உத்தரவிடப்பட்டது.
அதோடு இரண்டு ஆண்டுகளுக்கு ஓட்டுநர் உரிமம் வைத்திருக்கவும் அவர் தகுதி நீக்கம் செய்யப்பட்டார்.
அலட்சியமான மற்றும் அபாயகரமான வாகனம் ஓட்டுதல் தொடர்பான 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் 42 ஆவது (1) இன் பிரிவின் கீழ் விசாரணைகள் நடைபெற்று வருகிறது.
42 வயதான பெண் ஓட்டுநருக்கு நடத்தப்பட்ட சுவாசப் பரிசோதனையில், அனுமதிக்கப்பட்ட அளவை விட அதிக அளவில் மது அருந்தியது கண்டறியப்பட்டதாக கோலாலம்பூர் போக்குவரத்து விசாரணை மற்றும் அமலாக்கத் துறைத் தலைவர் சம்சுரி இசா (Zamzuri Isa ) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தார்.
இன்று கோலாலம்பூர் போக்குவரத்து நீதிமன்றத்தில், 1987 ஆம் ஆண்டு சாலைப் போக்குவரத்துச் சட்டத்தின் பிரிவு 45A(1)-இன் கீழ், குடிபோதையில் வாகனம் ஓட்டியதாக கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை அந்த பெண்மணி ஒப்புக் கொண்டார்.



