Latestமலேசியா

செந்துல் LRT நிலையக் கழிப்பறையில் பெண்ணைப் பின்தொடர்ந்த ஆடவனுக்கு RM3,500 அபராதம்

கோலாலம்பூர், ஏப் 20 – செந்துல் LRT நிலையக் கழிப்பறையில் ஒரு பெண்ணைப் பின்தொடர்ந்த கடை உதவியாளருக்கு, இங்குள்ள கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று 3,500 ரிங்கிட் அபராதம் விதித்தது. 23 வயது அப்துல் சமத் ரோஸ்மான், ( Abdul Samad Rosman) தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து , மாஜிஸ்திரேட் அய்னா அஸரா அரிபின்
( Aina Azahra Arifin) இந்த அபராதத் தொகையை விதிப்பதாக தீர்ப்பளித்தார். மேலும் அபராதத்தைச் செலுத்தத் தவறினால், குற்றம் சாட்டப்பட்டவருக்கு நான்கு மாதங்கள் சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் என மாஜிஸ்திரேட் உத்தரவிட்டார்.

அந்த இளைஞன் ஏப்ரல் 16 ஆம் தேதி காலை சுமார் 8 மணியளவில், கோலாம்பூரிலுள்ள செந்துல் எல்.ஆர்.டி நிலையத்தின் பெண்கள் கழிப்பறையில் 44 வயதுப் பெண் மானப்பங்கப்படுத்தும் சூழ்நிலைக்கு செயல்பட்டதாக தண்டனைச் சட்டத்தின் 509 ஆவது விதியின் கீழ் Abdul Samad மீது குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த குற்றத்தை ஒப்புக் கொண்ட அந்த இளைஞன் நீதிமன்றத்திடமும் பாதிக்கப்பட்ட பெண்ணிடமும் மன்னிப்புக் கேட்டுக்கொண்டதோடு இனிமேல் இப்படியொரு குற்றத்தை செய்யமாட்டேன் என தெரிவித்தான்.

Show More

Related Articles

Back to top button
error: Content is protected !!