நைரோபி, மே-10, மேற்கு ஆப்ரிக்க நாடான செனகலில் உள்ள Dakar அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து புறப்படும் போது, போயிங் 737 ரக விமானம் ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில், 11 பேர் காயமுற்றனர்.
அவர்களில் விமானி உள்ளிட்ட நால்வர் படுகாயம் அடைந்தனர்.
Air Senegal நிறுவனம் வாடகைக்கு எடுத்திருந்த அவ்விமானம் வியாழக்கிழமை காலை Mali நாட்டின் தலைநகரான Bamako நோக்கி புறப்பட்ட போது அச்சம்பவம் நிகழ்ந்தது.
அப்போது விமானத்தில் 79 பயணிகள் மற்றும் 6 பணியாளர்கள் இருந்தனர்.
அச்சம்பவத்தை அடுத்து Dakar விமான நிலையம் சில மணி நேரங்களுக்கு மூடப்பட்டு, பின்னர் மீண்டும் விமானப் பயணங்கள் தொடரப்பட்டன.
விமானம் ஓடுபாதையை விட்டு விலகியச் சம்பவம் தொடர்பில், செனகல் நாட்டு போக்குவரத்து அமைச்சு உடனடி விசாரணைக்கு உத்தரவிட்டது.
விமானம் விபத்துக்குள்ளாகி அதன் இடப்பக்க இறக்கையும் இயந்திரமும் தீப்பற்றிய காட்சிகள் அடங்கிய காணொலிகள் முன்னதாக சமூக வலைத்தளங்களில் பரவின.