
ஜோகூர் பாரூ, ஜூலை 30 – நாட்டை உலுக்கிய கொடூரமாக கொலை செய்யப்பட்ட 6 வயது சிறுவன் திஷாந்தின் இறுதிச் சடங்கு மிகுந்த சோகமான சூழலில் இன்று காலை 10 மணிக்கு நடந்து முடிந்தது.
பண்டார் ஶ்ரீ அலாமில் உள்ள உறவினர் வீட்டில் காலை 8 மணிக்கு தொடங்கிய இறுதிச் சடங்கில் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கலந்துக் கொண்டனர்.
திஷாந்தின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தப்பட்டு பின்னர் ஜோகூர் பாரு ஜாலான் கெபூன் தேயில் உள்ள இந்து மின்சுடலையில் தகனம் செய்யப்பட்டது.
கடந்த ஜூலை 24ஆம் திகதி காணாமல் போனதாக கூறப்பட்ட சிறுவன் திஷாந்தின் உடல் பின்னர் கொடூரமாக கழுத்து நெறிக்கப்பட்டு கொலை செய்யப்பட்ட நிலையில் மீட்கப்பட்டது. அவனது 36 வயது தந்தை விசாரணைக்காக 7 நாள் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளான்.